முன்னோட்டம்

முன்னோட்டம்

பகுதி 1

கருத்துக்கள்

சூமிற்கு வரவேற்கிறோம் – சாதாரண மக்கள் செய்யும் சாதாரண காரியங்களை கொண்டு தேவன் எப்படி பெரிய காரியங்களை செய்கிறார் என்பதை காண்பீர்கள்.
கீழ்படிய கற்றுக் கொடுங்கள் – சீஷராய் இருப்பதின் சாராம்சத்தையும், சீஷராக்குவதையும், சபையைப் பற்றியும் கண்டறியுங்கள்.
ஆவிக்குறிய சுவாசம் – சீஷனாய் இருப்பதென்பது தேவன் சொல்வதைக் கேட்டு அதற்கு கீழ்படிவதாகும்.

கருவிகள்/முறைகள்

S. O. A. P. S வேத வாசிப்பு – கடவுளுடைய வார்த்தை படிப்பதற்கும் அதற்கு கீழ்படிவதற்கும் அதை பகிர்ந்து கொள்வதற்கும் இது ஒரு நல்ல முறை.
பொறுப்புணர்வு குழுக்கள் – ஒரே பாலினம் கொண்ட 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாய் வாரம் ஒரு முறை சந்தித்து சரியாக செல்லும் காரியங்களிலே ஒருவரையொருவர் ஊக்கப்படுத்திக் கொள்ளவும் சரியல்லாத பகுதிகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் உபயோகப்படும் ஒரு முறை.

பயிற்சி

பொறுப்புணர்வு குழுக்கள் – 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாய் பிரிந்து பொறுப்புணர்வு கேள்விகளைப் பற்றி உரையாடவும். (45 நிமிடங்கள்)

பகுதி 2

List 100 people you know, 3 categories: those who follow Jesus, those who don't follow Jesus, those they're not sure about

கருத்துக்கள்

தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோர் – 4 வழிகளில் ஒவ்வொரு நாளும் தேவன் நம்மை இயேசுவைப் போல் மாற்றுவதை கண்டு பிடிப்பீர்கள்.

கருவிகள்/முறைகள்

ஜெப சுழற்சி – 1 மணி நேரம் ஜெபத்தில் செலவிடுவது எவ்வளவு எளிதானது என்பதை கண்டறியுங்கள்.
பட்டியல் 100 – உறவுகளை கடவுளுக்கு நேராய் நடத்துவதற்கு உதவும் ஒரு கருவி.

பயிற்சி

ஜெப சுழற்சி – 1 மணி நேரத்தை ஜெபத்தில் செலவிடுங்கள்.
பட்டியல் 100 – உங்கள் பட்டியல் 100ஐ தயாரியுங்கள் (30 நிமிடங்கள்)

பகுதி 3

Whoever can be trusted with very little can also be trusted with much. - Jesus. Breathe in, hear, breathe out, obey and share. Giving God's blessings
Obey, do, practise, share, teach, pass on

கருத்துக்கள்

ஆவிக்குறிய பொருளாதாரம் – கடவுளுடைய பொருளாதாரம் எப்படி உலக பொருளாதாரத்திலிருந்து மாறுபட்டது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களுக்கு கொடுத்ததில் யார் உண்மையுள்ளவர்களாய் இருக்கிறார்களோ அவர்களை கடவுள் உபயோகப்படுத்துவார்.
சுவிஷேசம் – மனிதனுடைய ஆரம்பத்திலிருந்து இந்த உலக முடிவு வரையுள்ள, கடவுளின் நற்செய்தியை எப்படி பகிர்ந்து கொள்வது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

கருவிகள்/முறைகள்

ஞானஸ்நானம் – இயேசு சொன்னார் ‘ நீங்கள் புறப்பட்டு போய் எல்லா தேசத்தாருக்கும் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே ஞானஸ் நானம் கொடுங்கள் என்றார் …’ இதை எப்படி கடைபிடிப்பது என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

பயிற்சி

கடவுளின் கதையை பகிர்ந்து கொள்ளுங்கள் – 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாய் பிரிந்து கடவுளின் கதையை பகிர்ந்து கொள்வதற்கு பயிற்சி செய்யுங்கள் (45 நிமிடங்கள்)

பகுதி 4

கருத்துக்கள்

பெரிய ஆசீர்வாதம் – இயேசுவுக்காய் ஒரு சீஷரை மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தையும் அவர்களை பெருகச் செய்யும் வழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள்.
பார்ப்பதற்காய் கண்கள் – கடவுளுடைய இராஜ்ஜியம் எங்கே இல்லை என்பதை கண்டறிவீர்கள். அங்கே தான் கடவுள் அதிகமாய் இடைபட விரும்புகிறார்.
மெதுவான சீஷத்துவம் – குறைவான வேகம் சீஷர்களை உருவாக்குவதில் என்ன செய்யும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

கருவிகள்/முறைகள்

3 நிமிட சாட்சி – இயேசு உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றினார் என்பதை 3 நிமிடத்தில் பகிர்ந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
கர்த்தரின் பந்தி – இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவை எளிய வழியில் கொண்டாடும் முறை. அதை கற்றுக் கொள்ளுங்கள்.

பயிற்சி

உங்களின் சாட்சியை பகிர்ந்து கொள்ளுதல் – 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாய் பிரிந்து உங்களின் சாட்சியை பகிர்ந்து கொள்வதற்கு பயிற்சி செய்யுங்கள் (45 நிமிடங்கள்)
கர்த்தரின் பந்தி – குழுவாக இதை பின்பற்ற நேரம் எடுத்துக் கொள்ளுங்கள் (10 நிமிடங்கள்)

பகுதி 5

கருத்துக்கள்

சமாதான நபர் – எப்படி சமாதான நபராய் இருப்பது என்பதையும் அவரை எப்படி கண்டறிவது என்பதையும் கற்றுக் கொள்ளுங்கள்

கருவிகள்/முறைகள்

ஜெப நடை – மற்றவர்களுக்காக ஜெபியுங்கள் என்ற ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படிவதற்கு இது ஒரு எளிய வழி. அது நடந்து கொண்டே ஜெபிப்பது!

பயிற்சி

B. L. E. S. S ஜெபம் – பல வழிகளில் மற்றவர்களுக்காய் ஜெபிப்பதற்கு இந்த பயிற்சி உங்களுக்கு நினைவூட்டுகிறது. (15 நிமிடங்கள்)
ஜெப நடை - 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாய் பிரிந்து, வெளியே சென்று ஜெப நடையை பயிற்சி செய்யுங்கள் (60 – 90 நிமிடங்கள்)

பகுதி 6

கருத்துக்கள்

உண்மைத்தண்மை – இதைப் பற்றி சீஷர்கள் தெரிந்திருப்பதை விட பின்பற்றுவது அதிக முக்கியம்.

கருவிகள்/முறைகள்

3/3 குழு மாதிரி – 3/3 குழு என்பதை இயேசுவைப் பின்பற்றுபவர்கள் கூடி ஜெபிக்கவும், கற்றுக் கொள்ளவும், வளரவும், ஐக்கியப்படவும் கற்றுக் கொண்டதை பயிற்சி செய்யவும் ஒரு வழியாகும். அந்த வகையில் 3/3 குழு ஒரு சிறிய குழு மட்டுமல்ல ஒரு எளிய சபையுமாகும் (80 நிமிடங்கள்)

பகுதி 7

கருத்துக்கள்

பயிற்சி சுழற்சி – பயிற்சி சுழற்சியைப் பற்றியும் அது எப்படி சீஷர்களை உருவாக்க பயன்படுகிறது என்பதைப் பற்றியும் கற்றுக் கொள்ளுங்கள்.

பயிற்சி

3/3 குழு – 3/3 குழு மாதிரியை அனைவரும் 90 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

பகுதி 8

கருத்துக்கள்

தலைமத்துவ குழுக்கள் – மற்றவர்களுக்கு சேவை செய்வதின் மூலம், தன்னை ஊழியத்திற்கு அழைத்தார் என்று உணர்பவர்கள் அதை வளர்த்துக் கொள்ளும் முறையாகும்.

பயிற்சி

3/3 குழு – 3/3 குழு மாதிரியை அனைவரும் 90 நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

பகுதி 9

கருத்துக்கள்

சீரற்ற – சீஷர்களை உருவாக்குவதென்பது, சீராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை பார்க்கவும். பல காரியங்கள் ஒரே சமயத்தில் நடைபெற முடியும்.
வேகம் – பெருகுவது அவசியம். சீக்கிரமாக பெருகுவது இன்னும் அவசியம். ஏன் வேகம் தேவை என்ற பகுதியை பார்க்கவும்.
இரண்டு சபைகளின் பகுதி – போய் தங்கி இருப்பதின் மூலம் எப்படி இயேசுவின் கட்டளைக்கு கீழ்படிவதென்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

பயிற்சி

3 மாத திட்டம் – அடுத்த 3 மாதத்திற்கு சூம் பயிற்சியில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை எப்படி நடைமுறை படுத்துவீர்கள் என்பதை பகிர்ந்து கொள்ளவும் (60 நிமிடங்கள்)

பகுதி 10 – மேம்பட்ட பயிற்சி

கருத்துக்கள்

இணைப்பில் தலைமத்துவம் – ஒரு பெரிய ஆவிக்குறிய குடும்பமாய் வாழ்வது, எப்படி சபைகளை பெருகச் செய்யும் என்பதை கற்றுக் கொள்ளுங்கள்.

கருவிகள்/முறைகள்

பயிற்சி சரிபார்ப்பு பட்டியல் – இது சீஷர்களை உருவாக்குவதில் நீங்கள் எப்படி செயல் படுகிறீர்கள் என்பதை சரிபார்க்கும் ஒரு பட்டியல்.
சக வழிகாட்டல் குழுக்கள் – இந்த குழு, 3/3 குழுவை ஆரம்பிப்பதற்கு வழிகாட்டும் குழு. இது 3/3 மாதிரியை பின்பற்றுகிறது. கடவுளுடைய காரியங்கள் எப்படி உங்கள் ஏரியாவில் நடைபெற்றிருக்கிறது என்பதை அளக்கும் முறை.

பயிற்சி

சக வழிகாட்டல் குழுக்கள் – 2 அல்லது 3 பேர் கொண்ட குழுவாக பிரிந்து சக வழிகாட்டல் குழு மாதிரியை பயிற்சி செய்யவும் (60 நிமிடங்கள்)