சூம் கேள்விகள்
நூறு சதவிகிதம் இது இலவசமா?
ஆம். பிரீமியம் பதிப்புகள் இல்லை, சோதனை காலங்கள் இல்லை, தயாரிப்புகளின் பின்தொடர் விற்பனை இல்லை. இலவசமாக நாம் பெற்றோம். சுதந்திரமாக கொடுக்கிறோம்.இந்த பயிற்சியை எடுப்பதற்கு உங்களுக்கு எவ்வளவு வயது நிரம்பியிருக்க வேண்டும்?
13 வயதுக்கு மேற்பட்டவருக்கு இந்த பயிற்சியை பரிந்துரைக்கிறோம். அதற்கு குறைவாய் உள்ள உங்கள் குழந்தை பயன்பெறும் என்று நீங்கள் நினைபீர்களாயின், தாராளமாய் பங்கு பெறட்டும்.ஒருவருக்கு பயிற்சி தேவை ஆனால் அவரிடம் மின்னஞ்சல் இல்லையென்றால்?
கண்டிப்பாக உங்கள் குழுவில் உள்ள ஒருவரிடமாவது மின்னஞ்சல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் இனையதளத்திலுள்ள பயிற்சி விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். குழுவில் பங்கு கொள்ளும் எல்லோருக்கும் மின்னஞ்சல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.பயிற்சியை ஆரம்பிப்பதற்கு முன் அதன் பாடங்களை எப்படி நான் பார்க்க முடியும்?
“தொகுப்பு” பகுதியை பாருங்கள். ஒவ்வொரு வகுப்பிலும் நீங்கள் கற்றுக் கொள்ளும் பயிற்சி முறை மற்றும் குழுக்கள் பற்றிய விவரங்களை தருகிறது.பயிற்சியின் உள்ளடக்கம் என்ன?
உள்ளடக்க பகுதியில் முழு தொகுப்பையும் காணலாம். அல்லது வழிகாட்டி புத்தகத்தை தரவிறக்கம் செய்து படிக்கலாம். உள்னுழைந்து ஒரு குழுவை ஆரம்பிக்கலாம். முதல் பக்கத்திலுள்ள “பகுதிகளை ஆராய” பகுதியை தெரிவு செய்யவும். இது பயிற்சி தொகுப்பு முழுவதையும் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும்.பயிற்சிக்கு முன்பதாக வழிகாட்டி புத்தகத்தின் பிரதியை எடுக்க வேண்டும். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?
ஒவ்வொரு பக்கத்திலும் ‘எங்களைப் பற்றிய’ இணப்பை சொடுக்கும் போது வழிகாட்டி புத்தகத்தை கண்டு கொள்ளலாம்.நான் தெரியாமல் ‘அடுத்த’ பட்டனை அமுக்கி விட்டேன். எனவே மீண்டும் வீடியோவை பார்ப்பதற்கு என்ன செய்வது?
“முந்தைய””பிந்தைய” பட்டங்களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான பகுதிக்கு செல்லவும். தொகுப்பிலுள்ள பகுதி எண்ணைப் பயன்படுத்தியும் உங்களுக்கு தேவையான பகுதிக்கு நேரடியாக செல்லலாம்.நிறைய டிஎம்எம் மற்றும் சிபிஎம் பயிற்சியாளர்கள் உள்ளனர். பின் எதற்கு சூம் பயிற்சி?
இணைய தள பயிற்சியை விட, நேர்முக பயிற்சியே சிறந்தது. இணைய தள பயிற்சியால் நேர் முக பயிற்சியை மாற்ற கூடாது. துரதிஷ்டவசமாக, நேரமின்மை, அறியாதது போன்ற காரணங்களால் அனேகருக்கு நேர் முக பயிற்சி கிடைப்பதில்லை. சூம் பயிற்சியானது அப்படிப்பட்ட மக்களுக்காய் உருவாக்கப் பட்டது. மற்ற பயிற்சிகளைப் போன்றே இந்த பயிற்சியின் கோட்பாடுகளும் உள்ளது. இந்த பயிற்சியில் பங்கு பெற்றவர் இதே போல் மற்றொரு பயிற்சியை ஆரம்பிப்பது எளிதானது. சீஷர்களை பெருக்கும் கோட்பாட்டில் இது ஒரு வல்லமையான கருவியாகும்.சூமிற்கு விசுவாச வாசகம் என்ன?
சூம் ஒரு நிர்வாகத்தால் நடத்தப்படாததால் அதற்கு விசுவாச வாசகம் இல்லை. ஆனால் லுசேன் உடன்படிக்கையுடன் நாங்கள் ஒத்து போகிறோம். Read the Covenantநானே இந்த பயிற்சியை கற்றுக் கொள்ள முடியுமா?
இல்லை. இந்த பயிற்சியில் ஒவ்வொருவரும் முடிக்க வேண்டிய பயிற்சிகள் உண்டு. ஒவ்வொரு பகுதிக்கும் 3-4 பேர் தேவை. இல்லையெனில் முழு பயிற்சியை உங்களால் உணர முடியாது.இந்த பயிற்சி யாருக்கு சரியானதாக இருக்கும்?
இந்த பயிற்சி 13 வயதுக்கு மேற்பட்ட இயேசுவை பின்பற்றுபவர்களுக்கு உகந்தது. எதிர்காலத்தில், படிக்க தெரியாதவர்களுக்கும் இது போன்ற ஒரு பயிற்சியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்கு உட்படும் ஒவ்வொரு நபரும் இந்த பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம்.சூம் யாருக்கு சொந்தமானது?
எந்தவொரு தனிப்பட்ட நிறுவனமும் இந்த சூம் திட்டத்தை நடத்தவில்லை. பரலோகத்தில் செய்யப்படுவது போல இந்த பூலோகத்தின் கடைசி முனை மட்டும், அவருடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக சேர்ந்த குழு. ஜோனத்தான் திட்டத்தின் ஒரு கூட்டத்தில் தான் இந்த திட்டத்திற்கான ஐடியா முளைத்தது ஆனால் பின்பு அதை விட இந்த திட்டம் வளர்ந்து விட்டது. ஜோனத்தான் திட்டமும் உலகமுழுவதும் சீஷர்களை பெருக்குவதற்காய் உருவாக்கப்பட்ட ஒரு திட்டம்.திட்டமிட்ட 3 கட்டங்கள் என்ன?
கட்டம் 1:
முதல் கட்டம், அமெரிக்கா மற்றும் ஆங்கில மொழி பயிற்சியின் மேல் கவனமாயிருக்கும். இந்த கட்டத்தின் நோக்கம், அமெரிக்காவிலுள்ள ஒவ்வொரு 5000 பேருக்கு, 4-12 பேர் கொண்ட ஒரு பயிற்சி குழுவை ஏற்படுத்துவது. ஒவ்வொரு குழுவிற்கும் இரண்டு சபைகளை ஆரம்பிப்பதற்கு சவால் விடுக்கப்படும். 65,000 சூம் குழுக்களையும், 1,30,000 சபைகளையும் அமெரிக்காவிலே ஏற்படுத்துவதே இந்த கட்டத்தின் நோக்கம்.
கட்டம் 2:
இரண்டாவது கட்டம், முதல் கட்டத்தில் ஏற்படுத்தப் பட்ட சபைகளுக்கு பயிற்சி கொடுக்கும். இந்த திட்டம் கீழ்கண்ட மொழிகளில் துவங்கும். அமேரிக், அரேபிக், பெங்காலி, போஜ்பூரி, பர்மீஸ், மேன்ட்ரின், கேண்டொனீஸ், பார்ஸி, பிரெஞ்ச், ஜெர்மன், குஜராத்தி, கவுசா, ஹிந்தி, இன்தோனீசியன், இடாலியன், ஜப்பானீஸ், கன்னடா, கொரியன், மைதிலி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, போர்சுகீஸ், ரஷ்யன், சோமாலி, ஸ்பேனிஷ், ஸ்வாகிலி, தமிழ், தெலுகு, தாய், டர்கிஷ், உருது, வியட்னாமிஷ், டொருபா.
கட்டம் 3:
இந்த மூன்றாவது கட்டம், கட்டம் 1 மற்றும் 2-ல் உருவான சபைகளைக் கொண்டு உலகம் முழுவதும் சீஷர்களை உருவாக்க அவர்களை தயார் செய்கிறது. நம்முடைய சந்த்தியிலேயே சீஷர்களை பெருகச் செய்வதற்காகவே சூம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதை அடைவதற்காகவே நாங்கள் இரண்டு தீர்வுகளை உருவாக்கியுள்ளோம். அந்த தீர்வுகள் சூம் பயிற்சி பெற்ற குழுக்களை அதனுடன் இணக்கும் மற்றும் அமெரிக்காவை விட்டு வெளியில் உள்ள ஒவ்வொரு 50000 மக்களுக்கும் ஒரு சபையை ஏற்படுத்தும்.
இது ஏன் சூம் என்று அழைக்கப்படுகிறது?
சூம் என்றால் கிரேக்க மொழியில் ஈஸ்ட் என்று அர்த்தம். மத் 13:33-ல் இயேசு இப்படி சொல்கிறார். “பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவிற்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைத்தாள்”. இது, எப்படி சாதாரண மக்கள், சாதாரண காரியங்களைக் கொண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தில் பெரிய காரியங்களை செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. சூம் பயிற்சி சாதாரண விசுவாசிகளை அவர்கள் அருகாமையில் வசிக்கும் மக்களை சென்று சேர அவர்களை பலப்படுத்துகிறது.இந்த பயிற்சி எந்தெந்த மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது?
இந்த திட்டம் கீழ்காணும் மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. மற்ற மொழிகளில் மொழிபெயர்க்க தேவைப்படுவோர்க்கு அதை நாங்கள் கொடுக்கிறோம். அமேரிக், அரேபிக், பெங்காலி, போஜ்பூரி, பர்மீஸ், மேன்ட்ரின், கேண்டொனீஸ், பார்ஸி, பிரெஞ்ச், ஜெர்மன், குஜராத்தி, கவுசா, ஹிந்தி, இன்தோனீசியன், இடாலியன், ஜப்பானீஸ், கன்னடா, கொரியன், மைதிலி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, போர்சுகீஸ், ரஷ்யன், சோமாலி, ஸ்பேனிஷ், ஸ்வாகிலி, தமிழ், தெலுகு, தாய், டர்கிஷ், உருது, வியட்னாமிஷ், டொருபா.வளர்ச்சியை கண்டறிவதற்கு செல்கமொழிபெயர்ப்பின் தற்போதைய நிலை.இந்த குழுக்கள் எப்படி ஆரம்பிக்கப்பட்டது? கற்பிக்கப்பட்ட பயிற்சியாளருடனா அல்லது ஏற்பாடு செய்யப்படவர்களுடனா?
புதிதாக பயிற்சி பெறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட சபையிலிருந்தோ அல்லது குழுவிலிருந்தோ வருவார்களாயின், பின் புதிதாய் துவங்கப்பட்ட குழுக்கள் அந்த சபையோடும் குழுவோடும் தொடர்பு வைத்துக் கொள்வதே சிறந்தது. அந்த குழுவின் மூலம் ஒரு புதிய நெட்வொர்க்கை துவங்குவது. மூன்றாவது வழி, சிறிய சபைகளின் நெட்வொர்க்கில் இந்த குழு இணைவது. இந்த பயிற்சியில் இருக்கும் அனேகர் அப்படிப்பட்ட நெட்வொர்க்கில் இருந்து வந்தவர்கள். எனவே தேவையெனில் அதை நாங்கள் உங்களுக்கு ஏற்பாடு செய்ய முடியும்.யார் என்னுடைய 3 மாத திட்டத்தை பார்ப்பார்கள்?
நீங்கள் மட்டுமே உங்கள் திட்டத்தை பார்க்க முடியும். அதை உங்கள் குழுவுடன் இணைக்கும் பொழுது மட்டுமே உங்கள் குழு தலைவரால் உங்கள் 3 மாத திட்டத்தை பார்க்க இயலும். உங்களுக்கு கற்றுக் கொடுப்பவரும் அதை பார்க்கலாம். உங்களுக்கு கற்றுக் கொடுக்க தேவை இல்லையெனில் அதை ஆன்லைனில் பதிவிடவும்.என்னுடைய 3 மாத திட்டத்தை அச்சிடலாமா?
முதலில் உங்கள் திட்டத்தை கணிப்பொறியில் சேமியுங்கள். பின் அந்த பக்கத்தின் கடைசிக்கு சென்று ‘அச்சிடுக’ என்ற பட்டனை அழுத்தவும்.என்னுடைய 3 மாத திட்டத்தை பிறகு மாற்றலாமா?
ஆம். உங்களுடைய 3 மாத திட்டத்தை பிறகு மாற்றிக் கொள்ளலாம். கீழே உள்ள ‘சேமி’ என்ற பட்டனை அழுத்த தவறி விடாதீர்.என்னுடைய குழுவிலுள்ள நபர்களுடன் பேசுவதற்கு சூம் ஏதாவது வழி செய்கிறதா?
இப்பொழுது இல்லை. உங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரு உள்னுழைவை உண்டாக்கி சூம் குழுவில் சேர்வதற்கு பரிந்துரைக்கிறோம். அப்படி செய்யும் பொழுது இந்த பயிற்சிக்கு தேவைப்படும் அனைத்து புத்தகங்களும் மற்ற பொருட்களும் கிடைக்கும். பிறகு உங்கள் குழு முக நூல், வாட்ஸஆப் போன்ற சமூக வலைதளங்களை தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தலாம்.சூம் திட்டத்தின் நோக்கம்
சூம் என்றால் கிரேக்க மொழியில் ஈஸ்ட் என்று அர்த்தம். மத் 13:33-ல் இயேசு இப்படி சொல்கிறார். “பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவிற்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைத்தாள்”. இது, எப்படி சாதாரண மக்கள், சாதாரண காரியங்களைக் கொண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தில் பெரிய காரியங்களை செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. சூம் பயிற்சி சாதாரண விசுவாசிகளை உலகம் முழுவதும் இருக்கும் மக்களை சென்று சேர அவர்களை பலப்படுத்துகிறது.
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.