ஜூம் பயிற்சி பற்றி
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.
சூம் திட்டத்தின் நோக்கம்
சூம் என்றால் கிரேக்க மொழியில் ஈஸ்ட் என்று அர்த்தம். மத் 13:33-ல் இயேசு இப்படி சொல்கிறார். “பரலோக இராஜ்ஜியம் புளித்த மாவிற்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும் வரைக்கும் மூன்று படி மாவிலே அடக்கி வைத்தாள்”. இது, எப்படி சாதாரண மக்கள், சாதாரண காரியங்களைக் கொண்டு, தேவனுடைய இராஜ்ஜியத்தில் பெரிய காரியங்களை செய்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. சூம் பயிற்சி சாதாரண விசுவாசிகளை உலகம் முழுவதும் இருக்கும் மக்களை சென்று சேர அவர்களை பலப்படுத்துகிறது.
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.

சூம் 10 பகுதிகளைக் கொண்டது, ஒவ்வொன்றிற்கும் 2 மணி நேரம்:
- சீஷர்களை பெருக்குவதற்கான அடிப்படை தத்துவத்தை உங்கள் குழு கற்றுக் கொள்வதற்கு இந்த வீடியோ மற்றும் ஆடியோ உதவும்.
- குழுவாக விவாதிப்பது, அங்கே பகிர்ந்து கொள்ளப்பட்ட கருத்துக்களைப் பற்றி சிந்திப்பதற்கு உங்கள் குழுவிற்கு உதவும்.
- நீங்கள் கற்றுக் கொண்டதை செயல் படுத்துவதற்கு இந்த எளிய பயிற்சிகள் உதவும்.
- தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கும் வளர்வதற்கும் இந்தப் பகுதியில் உள்ள சவால்கள் உங்கள் குழுவிற்கு உதவும்.

எப்படி ஆரம்பிப்பது:
- நீங்கள் நுழைவை இன்னும் உருவாக்காமல் இருந்திருந்தால் இப்பொழுது செய்யுங்கள்.
- 3-11 நண்பர்களை அழைக்கவும். பயிற்சிக்கு குறைந்தது 3-4 பேர் கொண்ட குழு அவசியம்.
- உங்கள் நண்பர்களுடன் கூடி வருவதற்கு நேரத்தை குறிக்கவும்.
- இணையதள இணைப்பு உங்கள் செல்போனிலோ அல்லது வேறு ஏதாவது சாதனத்திலோ உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

உங்களின் முதல் கூட்டத்திற்கான ஆயத்தம்:
- சூம் வழிகாட்டி புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- நீங்கள் விரும்பினால் உங்கள் குழுவின் உறுப்பினர்களுக்கு அதின் பிரதியை அச்சிட்டு தரவும்.
- டிவியுடனோ அல்லது புரொஜெக்டருடனோ இணைத்து இந்த புத்தகத்தை திரையிடவும். அப்பொழுது உங்கள் குழுவில் உள்ள அனைவரும் பார்க்க வசதியாக இருக்கும்.