கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள்
இயேசுவைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் செய்கைகளுக்கு கணக்கொப்புவிக்க வேண்டும், எனவே இயேசுவைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். கணக்கொப்புவித்தலைக் குறித்த பல உவமைகளை இயேசு பகிர்ந்து கொண்டார். மேலும் நாம் என்ன செய்கிறோம், பேசுகிறோம் என்பதற்கு நாம் எவ்வாறு பொறுப்பாவோம் என்பதற்கான பல உண்மைகளை நமக்குக் கூறினார். எனவே கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள் என்பது சகோதர, சகோதரிகள் உண்மையிலும், அன்பிலும் ஒன்றாக நடப்பதன் இயல்பான வெளிப்பாடாகும்.
கணக்கு கொடுக்க வேண்டிய குழுக்கள் ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு அல்லது மூன்று நபர்களைக் கொண்டவை - ஆண்களுடன் ஆண்கள், பெண்களுடன் பெண்கள்.
- அவர்கள் வாரத்திற்கு ஒரு முறை கூடி, காரியங்கள் சரியாக நடக்கும் பகுதிகள் மற்றும் திருத்தங்கள் தேவைப்படும் பகுதிகளை வெளிப்படுத்த உதவும் கேள்விகளின் தொகுப்பைப் பற்றி விவாதிப்பார்கள். நேருக்கு நேர் சந்திக்க முடியாவிட்டால் அவர்கள் தொலைபேசியில் கூட பேசலாம்.
கணக்கொப்புவிக்க வேண்டிய குழுவில் இருப்பவர்களுக்கான கேள்விகள் - பட்டியல் 1
- நாமும் இயேசுவைப் போல் மாற ஜெபியுங்கள்.
- எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் பிரார்த்தனை வாழ்க்கை எப்படி இருக்கிறது?
- அறிக்கையிட உங்களிடம் ஏதேனும் பாவம் இருக்கிறதா? [உறவு, பாலியல், நிதி, பெருமை, நேர்மை, அதிகாரத்திற்கு சமர்ப்பணம் போன்றவை]
- கடைசியாக கடவுள் சொன்னதை நீங்கள் கடைப்பிடித்தீர்களா? விவரங்களைப் பகிரவும்.
- இந்த வாரம் உங்கள் உறவு பட்டியலில் உள்ள "அவிசுவாசிகளுக்காக" நீங்கள் பிரார்த்தனை செய்தீர்களா? அவர்களில் யாருடனும் சுவிஷேசத்தைப் பகிர்ந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு உள்ளதா? விவரங்களைப் பகிரவும்.
- இந்த வாரம் ஒரு புதிய வசனத்தை மனப்பாடம் செய்தீர்களா? அதை மேற்கோள் காட்டவும்.
- இந்த வாரம் வேதத்திலிருந்து குறைந்தது 25 அதிகாரங்களையாவது வாசித்தீர்களா?
- வேதத்திலிருந்து, கடவுள் இந்த வாரம் உங்களுக்கு என்ன சொன்னார்?
- அதற்கு நீங்கள் குறிப்பாக என்ன செய்யப் போகிறீர்கள்?
- இந்த வாரம் உங்கள் 3/3 குழுவைச் சந்தித்தீர்களா? அது எப்படி இருந்தது?
- இந்த வாரம் ஒரு புதிய 3/3 குழுவைத் தொடங்குவதற்கு யாருக்காவது மாதிரியை காண்பித்தீர்களா அல்லது உதவி செய்தீர்களா? விவரங்களைப் பகிரவும்.
- கிறிஸ்துவுடன் நடப்பதற்கு உங்களுக்கு ஏதாவது தடையாக இருக்கிறதா?
- இந்த வாரம் சுவிசேஷத்தைப் பகிர்ந்துகொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? விவரங்களைப் பகிரவும்.
- இப்போதே 1-3 நிமிட சாட்சியத்தையும், சுவிசேஷத்தையும் பகிர்ந்து கொள்வதற்கு பயிற்சி செய்யுங்கள்.
- அடுத்த வாரம் குழுவிற்கு, யாரை அழைக்கலாம்? குழு நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்டிருந்தால், அதைப் பெருகச் செய்யவும்.
- பகிரப்பட்டவைகளைப் பற்றிய பிரார்த்தனையுடன் முடிவு செய்யுங்கள்.
கணக்கொப்புவிக்க வேண்டிய குழுவில் இருப்பவர்களுக்கான கேள்விகள் - பட்டியல் 2
- கடந்த வார வேத வாசிப்பின் மூலம் நீங்கள் பெற்ற வெளிப்பாடு, நீங்கள் நினைக்கும் மற்றும் வாழும் விதத்தை எவ்வாறு வடிவமைத்துள்ளது?
- கடந்த வாரத்தில் உங்களுக்கு கிடைத்த வெளிப்பாட்டை யாருக்கு தெரியப்படுத்தியுள்ளீர்கள், அது எவ்வாறு பெறப்பட்டது?
- கடவுள் கிரியை செய்வதை நீங்கள் எப்படி பார்த்தீர்கள்?
- உங்கள் வார்த்தைகளாலும், செயல்களாலும் இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்திற்கு இந்த வாரம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?
- நீங்கள் பாலியல் ரீதியாக கவர்ந்திழுக்கப்படும் சூழ்நிலைகளை சந்தித்தீர்களா அல்லது உங்கள் மனதை பொருத்தமற்ற பாலியல் எண்ணங்களால் மகிழ்விக்க அனுமதித்தீர்களா?
- உங்கள் பணத்தைப் பயன்படுத்துவதில் கடவுளின் உரிமையை நீங்கள் ஒப்புக்கொண்டீர்களா?
- நீங்கள் ஏதாவது ஒன்றின் மேல் இச்சையடைந்தீர்களா?
- உங்கள் வார்த்தைகளால் ஒருவரின் நற்பெயர் அல்லது உணர்வுகளை புண்படுத்தியிருக்கிறீர்களா?
- நீங்கள் வார்த்தையிலோ, செயலிலோ நேர்மையற்றவராக நடந்து கொண்டீர்களா அல்லது காரியங்களை மிகைப்படுத்தி சொன்னீர்களா?
- நீங்கள் போதை [அல்லது சோம்பேறித்தனம் மற்றும் ஒழுக்கமற்ற] நடத்தைக்கு உள்ளாகி விட்டீர்களா?
- நீங்கள் ஆடை, நண்பர்கள், வேலை அல்லது உடைமைகளுக்கு அடிமையாக இருந்தீர்களா?
- யாரையாவது மன்னிக்க தவறிவிட்டீர்களா?
- நீங்கள் எப்படிப்பட்ட கவலைகளை எதிர்கொள்கிறீர்கள்? நீங்கள் புகார் செய்தீர்களா அல்லது முறுமுறுத்தீர்களா?
- நீங்கள் நன்றியுள்ள இருதயத்தைப் பேணுகிறீர்களா?
- உங்களுடைய முக்கியமான உறவுகளில் நீங்கள் மரியாதை மற்றும் புரிதலில் தாராளமாக இருக்கிறீர்களா?
- எண்ணம், சொல் அல்லது செயலில் நீங்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொண்டீர்கள், எப்படி பதிலளித்தீர்கள்?
- மற்றவர்களுக்கு, குறிப்பாக விசுவாசிகளுக்கு சேவை செய்ய அல்லது அவர்களை ஆசீர்வதிக்க நீங்கள் எப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறீர்கள்?
- பிரார்த்தனைக்கான குறிப்பிட்ட பதில்கள் உங்களுக்கு கிடைத்ததா?
19. போன வாரத்திற்கான வாசிப்பை முடித்தீர்களா?
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
- நான் யாரை தவறாமல் சந்தித்து இந்த பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கலாம்? உங்களுக்கு ஒரு பெயரைக் காண்பிக்க, கடவுளிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள்.
- உங்களின் தனிப்பட்ட புனிதத்தன்மையுடனான இத்தகைய நோக்கத்திலிருந்து உங்களைத் தடுப்பது எது?
நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!
- உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
- அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
- ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
- உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.
பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.