சமாதானமாக இருக்கும் ஒரு நபரை எப்படி கண்டுபிடிப்பது
இயேசுவைப் பின்பற்றுபவர்கள் மிகக் குறைவாக இருக்கும் இடத்திலும், சீஷர்களை உருவாக்குவதை விரைவாக செய்வதற்கு சமாதானமான ஒரு நபர் நன்கு உதவ முடியும். அந்த நபர் யாராக இருக்கலாம் மற்றும் ஒருவரை நீங்கள் எப்போது கண்டுபிடிப்பீர்கள் என்பதை அறிய கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்.
இந்த வீடியோவைப் பாருங்கள்
அதிகம் இல்லாத - அல்லது எதுவுமே இல்லாத இடத்தில் நீங்கள் சீஷர்களை உருவாக்க விரும்பினால், சமாதானமான ஒரு நபரைத் தேடுவது,நீங்கள் செய்யும் மிக முக்கியமான காரியமாக இருக்கும்.
சமாதானமான ஒரு நபர்:
- உங்கள் கதை, கடவுளின் கதை மற்றும் இயேசுவின் நற்செய்தி ஆகியவற்றைக் கேட்க விரும்பும் ஒருவர்.
- விருந்தோம்பல் மிக்க மற்றும் உங்களை அவர்களின் வீட்டிற்கு அல்லது பணியிடத்திற்கு அல்லது குடும்பம் மற்றும் நண்பர்களுடைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரவேற்கும் ஒருவர்.
- மற்றவர்களை அறிந்தவர் (அல்லது மற்றவர்களால் அறியப்பட்டவர்) மற்றும் ஒரு சிறிய குழு அல்லது கூட்டத்தை ஒன்றிணைப்பதில் உற்சாகமாக இருப்பவர்.
- தான் கற்றுக்கொண்டதில் உண்மையுள்ள மற்றும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு நபர் - நீங்கள் அவரை விட்டு சென்ற பிறகும்.
சமாதானமான நபரை அடையாளம் காண மூன்று எளிய வழிகள்:
- அந்த சமூகத்தில் உள்ளவர்களிடம் சிபாரிசு செய்யச் சொல்லி கேளுங்கள் -- "இங்கே நம்பப்படும் நபர் யார்? தமக்கு மேல் மற்றவர்களைப் பற்றி நினைக்கும் ஒருவர் இந்த இடத்தில் இருக்கிறாரா?"
- பிரார்த்தனை நடையின்போது நீங்கள் சந்திக்கும் ஒருவருக்காக பிரார்த்தனை செய்ய முன்வரவும்
- ஒரு நபரின் வாழ்க்கையில் கடவுள் செயல்படுகிறாரா என்பதைப் பார்க்க ஒவ்வொரு உரையாடலிலும் ஆவிக்குறிய கருத்துக்களை அறிமுகப்படுத்துங்கள்
நாம் அவர்களை எந்த வழியில் கண்டுபிடித்தாலும், சமாதானமான நபருடன் அதிக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று இயேசு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்
- "கெட்ட பெயர்" கொண்ட ஒருவர் (சமாரிய பெண் அல்லது கெர்கெசேனில் இருந்த பேய் பிடித்த ஆண் போன்ற) உண்மையில் சமாதானமான நபராக இருக்க முடியுமா? ஏன் அல்லது ஏன் இல்லை?
- உங்களுக்கு அருகில் உள்ள சமூகம் அல்லது சமூகத்தின் பிரிவு எது, எந்த சமூகத்தில் சிறிதளவு கூட (அல்லது இல்லை) இராஜ்யத்தின் பிரசன்னம் இல்லை? ஒரு சமாதானமான நபர் (திறந்த மனதுடையவர், விருந்தோம்பல், மற்றவர்களை அறிந்தவர் பகிர்வுகளையும் அறிந்தவர்) எவ்வாறு அந்தச் சமூகத்தில் நற்செய்தியின் பரவலைத் துரிதப்படுத்த முடியும்?
நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!
- உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
- அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
- ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
- உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!
சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.
பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.