சூம் பயிற்சியை ஆரம்பிக்கவும்
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.
கடவுளின் கதையைப் பகிர பல வழிகள் உள்ளன. ஆனால் சிறந்த வழி என்பது, நீங்கள் பகிரும் நபர் மற்றும் உலகத்தைப் பற்றிய அவர்களின் பார்வை மற்றும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பொறுத்தது. கேட்கத் தயாராக இருக்கும் இருதயங்களில் வேலை செய்ய, பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கும் இருதயங்களை கடவுள் பயன்படுத்துகிறார். கடவுளின் கதையைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழி, கடவுளின் படைப்பு முதல் இந்த யுகத்தின் முடிவில் வரும் அவரது தீர்ப்பு வரை என்ன நடந்தது மற்றும் நடக்கும் என்பதை விளக்குவது.
ஆரம்பத்தில், கடவுள் முழு உலகத்தையும் அதிலுள்ள அனைத்தையும் படைத்தார்.
அவர் முதல் மனிதனையும், முதல் மனுஷியையும் உருவாக்கினார். அவர் அவர்களை ஒரு அழகான தோட்டத்தில் வைத்தார். அவர் அவர்களை தனது குடும்பத்தின் ஒரு பகுதியாக ஆக்கினார் மற்றும் அவர்களுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார்.
என்றென்றும் வாழ்வதற்காக அவர்களைப் படைத்தார். மரணம் என்று எதுவும் இல்லை. இப்படிப்பட்ட பரிசுத்தமான இடத்தில் கூட, மனிதன் கடவுளுக்கு எதிராக கலகம் செய்து பாவத்தையும், துன்பத்தையும் உலகிற்கு கொண்டு வந்தான். கடவுள் மனிதனை தோட்டத்திலிருந்து விரட்டினார். மனிதனுக்கும், கடவுளுக்கும் இடையிலான உறவு முறிந்தது. இப்போது மனிதன் மரணத்தை சந்திக்க வேண்டும். பல நூறு ஆண்டுகளாக, கடவுள் உலகிற்கு தூதர்களை அனுப்பினார்.
அவர்கள் மனிதனுக்கு அவனது பாவத்தை நினைவூட்டினர் மற்றும் கடவுள் இந்த உலகிற்கு ஒரு மீட்பரை அனுப்புவதற்கு கொடுத்த வாக்குறுதியில் உறுதியாய் இருப்பதையும் அவர்களுக்குக் கூறினர். இரட்சகர் கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையிலான நெருங்கிய உறவை மீட்டெடுப்பார். இரட்சகர் மனிதனை மரணத்திலிருந்து விடுவிப்பார். இரட்சகர் நித்திய ஜீவனைக் கொடுப்பார் மற்றும் மனிதனுடன் என்றென்றும் இருப்பார் என்று தீர்க்கதரிசிகள் இந்த உலக மக்களிடம் சொன்னார்கள். கடவுள் நம்மை மிகவும் நேசிக்கிறார், சரியான நேரத்தில், அவர் தமது குமாரனை இரட்சகராக இந்த உலகிற்கு அனுப்பினார்.
இயேசு கடவுளின் குமாரன். அவர் ஒரு கன்னியின் மூலம் இந்த உலகில் பிறந்தார். அவர் ஒரு பரிபூரண வாழ்க்கை வாழ்ந்தார். அவர் ஒருபோதும் பாவம் செய்யவில்லை. இயேசு கடவுளைப் பற்றி மக்களுக்குப் போதித்தார். அவர் பல அற்புதங்களைச் செய்து தனது வல்லமையை வெளிப்படுத்தினார். பல பேய்களை விரட்டினார். பலரைக் குணப்படுத்தினார். குருடர்களைப் பார்க்கச் செய்தார். காது கேளாதவர்களைக் கேட்கச் செய்தார். முடவர்களை நடக்கச் செய்தார். இயேசு மரித்தவர்களையும் உயிரோடு எழுப்பினார். பல மதத் தலைவர்கள் இயேசுவைக் குறித்து அச்சம் அடைந்தனர் மற்றும் பொறாமைப்பட்டனர்.
அவர்கள் அவரைக் கொலை செய்ய விரும்பினர். அவர் ஒருபோதும் பாவம் செய்யாததால், இயேசு மரிக்க வேண்டியதில்லை.
ஆனால் அவர் நம் அனைவருக்கும் ஒரு தியாகமாக மரிப்பதைத் தேர்ந்தெடுத்தார். அவருடைய வேதனையான மரணம் மனித குலத்தின் பாவங்களை மறைத்தது. இதற்குப் பிறகு, இயேசு ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார். இயேசு செய்த தியாகத்தை கடவுள் பார்த்து ஏற்றுக்கொண்டார். மூன்றாம் நாளில் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்புவதன் மூலம் கடவுள் தம்முடைய அங்கீகாரத்தைக் காட்டினார்.
நாம் விசுவாசித்து, நம்முடைய பாவங்களுக்காக இயேசுவின் பலியை ஏற்றுக்கொண்டால் -- நாம் நம்முடைய பாவங்களிலிருந்து விலகி, இயேசுவைப் பின்பற்றினால், கடவுள் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரித்து, நம்மைத் தம் குடும்பத்தில் மீண்டும் இணைத்துக் கொள்வேன் என்று கூறினார்.
கடவுள் நமக்குள் வாழ பரிசுத்த ஆவியை அனுப்புகிறார் அதனால் நாம் இயேசுவைப் பின்பற்ற முடியும். இந்த மீட்டெடுக்கப்பட்ட உறவைக் காட்டவும், முத்திரையிடவும் நாம் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுள்ளோம்.
மரணத்தின் அடையாளமாக நாம் தண்ணீருக்குள் மூழ்குகிறோம். புதிய வாழ்க்கையின் அடையாளமாக, நாம் இயேசுவைப் பின்பற்றுவதற்காக தண்ணீரிலிருந்து எழுப்பப்படுகிறோம்.
இயேசு மரித்தோரிலிருந்து எழுந்த பின்பு 40 நாட்கள் இந்த பூமியில் இருந்தார்.
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களிடம், எல்லா இடங்களுக்கும் சென்று உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் தம் இரட்சிப்பின் நற்செய்தியைச் சொல்லும்படி கற்பித்தார். இயேசு கூறினார் - நீங்கள் புறப்பட்டுப் போய் அனைத்து நாடுகளிலும் சீஷர்களை உருவாக்குங்கள், பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் நாமத்தில் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்; மேலும் நான் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள். நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் - இந்த உலகத்தின் இறுதி வரை.
இயேசு அவர்கள் கண்களுக்கு முன்பாக பரலோகத்திற்கு ஏறிப்போனார். ஒரு நாள், இயேசு போன படியே மீண்டும் வருவார். அவர் தம்மை நேசிக்காத, மற்றும் தமக்கு கீழ்ப்படியாதவர்களுக்கு நித்திய தண்டனை கொடுப்பார். அவரை நேசித்து, அவருக்கு கீழ்ப்படிந்தவர்களுக்கு நித்திய பரிசுப்பொருளை அளிப்பார். நாம் அவருடன் புதிய வானத்திலும், புதிய பூமியிலும் என்றென்றும் வாழ்வோம்.
என் பாவங்களுக்காக இயேசு செய்த பலியை நான் விசுவாசித்து பெற்றுக்கொண்டேன். அவர் என்னைச் சுத்திகரித்து, அவருடைய குடும்பத்தில் ஒருவனாக என்னை மீட்டெடுத்தார். அவர் என்னை நேசிக்கிறார், நான் அவரை நேசிக்கிறேன், அவருடைய ராஜ்யத்தில் என்றென்றும் அவருடன் வாழ்வேன். கடவுள் உங்களை நேசிக்கிறார், மேலும் இந்த பரிசை நீங்கள் பெற வேண்டும் என்று விரும்புகிறார். இப்போதே அதைச் செய்ய விரும்புகிறீர்களா?
சுலபமாக இந்தக் கதையைச் சொல்ல வரும் வரை, இந்த நற்செய்தி விளக்கத்தை நீங்களே பயிற்சி செய்யுங்கள்.
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.