சூம் பயிற்சியை ஆரம்பிக்கவும்
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.
சக வழிகாட்டுதல் குழுக்கள், இயேசுவைத் தனிப்பட்ட முறையில் பின்பற்றுபவர்கள், எளிய தேவாலயங்கள், ஊழிய அமைப்புகள் அல்லது எளிய தேவாலய குழுக்கள் மூலம் தலைவருக்கு-தலைவர் வழிகாட்டுதலைப் பயன்படுத்துகின்றன. இந்த குழுக்களில் 3/3 குழுக்களைத் தொடங்கும் நபர்கள் உள்ளனர். இது 3/3 வடிவமைப்பைப் பின்பற்றுகிறது. மேலும் இது உங்கள் பகுதியில் கடவுளுடைய பணியின், ஆவிக்குறிய ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்கான சக்தி வாய்ந்த வழியாகும். இந்தக் குழுக்கள் இயேசுவின் ஊழியத்தின் முன்மாதிரியை வேதத்திலிருந்து பின்பற்றுகின்றன. ஒருவருக்கொருவர் கேள்விகளைக் கேளுங்கள் மற்றும் கருத்துக்களை பறிமாறிக் கொள்ளுங்கள் -- இவை அனைத்தும் 3/3 குழுவின் அதே அடிப்படை நேர அமைப்பைப் பயன்படுத்துகின்றன. இயேசு சொன்னார் - “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்: ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துங்கள். நான் உங்களை நேசித்தது போல், நீங்களும் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும். நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்பதை இதன் மூலம் எல்லாரும் அறிந்துகொள்வார்கள்." ஜெபம், கீழ்ப்படிதல், விண்ணப்பம் மற்றும் பொறுப்பு ஆகியவற்றின் மூலம் இயேசுவைப் பின்பற்றுபவர்கள் வளர உதவும் எளிய வடிவமைப்பை வழங்குவதே சக வழிகாட்டி குழுவின் நோக்கமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் - "ஒருவரையொருவர் நேசிப்பது."
முதல் மூன்றில் - நீங்கள் ஒரு அடிப்படை 3/3 குழுவில் இருப்பதைப் போலவே பிரார்த்தனையிலும், அக்கறை காட்டுவதிலும் நேரத்தைச் செலவிடுங்கள். குழுவின் தரிசனம் மற்றும் முந்தைய பொருத்தனைகளில் கொண்டிருக்கும் உண்மைத்தண்மையைப் பார்க்க நேரத்தை செலவிடுங்கள்: நீங்கள் கிறிஸ்துவில் எவ்வளவு நன்றாக நிலைத்திருக்கிறீர்கள்? [வேதம், பிரார்த்தனை, நம்பிக்கை, கீழ்ப்படிதல், முக்கிய உறவுகள்?] உங்கள் குழு, கடந்த அமர்வில் எடுக்கப்பட்ட செயல் திட்டங்களை செய்து முடித்ததா? அவற்றை மதிப்பீடு செய்யவும்.
பின்வரும் எளிய கேள்விகளை குழு விவாதிக்க வேண்டும்:
குழுவில் உள்ள அனைவருடனும் அமைதியாக ஜெபத்தில் நேரத்தை செலவிடுங்கள். இந்தக் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதைக் காட்டும்படி பரிசுத்த ஆவியானவரைக் கேளுங்கள்:
இறுதியாக குழுவாக ஜெபத்தில் நேரத்தை செலவிடுங்கள். ஒவ்வொரு உறுப்பினருக்காகவும் குழுவை ஜெபிக்கச் செய்யுங்கள். மேலும் அவர்கள் பிரிந்திருக்கும் போது, குழு சந்திக்கும் அனைவரின் இருதயங்களையும் தயார்படுத்தும்படி கடவுளிடம் கேளுங்கள். இந்த அமர்வில் கடவுள் அவர்களுக்குக் கற்பித்ததைக் கடைப்பிடிப்பதற்கும், அதற்கு கீழ்ப்படிவதற்கும் குழுவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தைரியத்தையும், பலத்தையும் கொடுக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்யுங்கள். குறிப்பாக ஒரு அனுபவமிக்க தலைவர் ஒரு இளைய தலைவருக்காக ஜெபிக்க வேண்டும் என்றால், அந்த பிரார்த்தனைக்கு இதுவே சரியான நேரம். இந்தக் குழுக்கள் அடிக்கடி தொலைவில் சந்திப்பதால், நீங்கள் தேவனுடைய பந்தியைக் கொண்டாடவோ அல்லது உணவைப் பகிர்ந்து கொள்ளவோ வாய்ப்பில்லை. ஆனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உடல்நலம் பற்றி விசாரிக்க நேரம் ஒதுக்குங்கள்.
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.