சூம் பயிற்சியை ஆரம்பிக்கவும்
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.
நான்கு கள கருவி என்பது தற்போதைய முயற்சிகளின் நிலை மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள ராஜ்யத்தின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் ஒரு விளக்கப்படமாகும். இது தலைமைத்துவக் குழுவால் பயன்படுத்தப்படுகிறது. இயேசு அடிக்கடி சீஷர்களை, ஊழியத்திலிருந்து அழைத்து, அமைதியான இடங்களுக்கு சென்று அவர்களுடைய கிரியைகளை மதிப்பீடு செய்தார். இயேசுவின் இந்த மாதிரியைப் பின்பற்றுவதற்கும், உங்களின் பொறுப்பிலிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தீர்வு காண்பதற்கும், உங்களுக்கும், உங்களுடன் இருக்கும் துணைத் தலைவர்களுக்கும் இந்த எளிய கருவி உதவுகிறது. செயல்பாடு, நபர்கள் மற்றும் குழுக்களை வெவ்வேறு துறைகளில் வகைப்படுத்துவதன் மூலம் மதிப்பீடு செய்ய சக வழிகாட்டுதல் கருவியைப் பயன்படுத்தவும்.
வெற்றுக் களம்
இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: எங்கு அல்லது யாருடன் [எந்த மக்கள் குழுக்கள்] தேவனுடைய இராஜ்யத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளீர்கள்?
விதைப்புக் களம்
இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ராஜ்யத்தின் நற்செய்தியை எங்கே அல்லது யாருடன் பகிர்ந்து கொள்கிறீர்கள்? நீங்கள் அதை எப்படி செய்கிறீர்கள்?
வளரும் களம்
இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: ஆவிக்குறிய ரீதியில், தனித்தனியாக மற்றும் அவர்களின் இயற்கையான குழுக்களில் நீங்கள் மக்களை எவ்வாறு தகுதிப்படுத்துகிறீர்கள் மற்றும் அவர்களை எவ்வாறு வளர்க்கிறீர்கள்?
அறுவடைக் களம்
இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: புதிய ஆவிக்குறிய குடும்பங்கள் [எளிய தேவாலயங்கள்] எவ்வாறு உருவாகின்றன?
பெருகும் களம்
இந்தக் கேள்வியைக் கேளுங்கள்: யாருடன், எப்படி, எப்போது உண்மையுள்ள நபர்களை பிரித்தெடுத்து, அவர்களை தகுதிப்படுத்தி பெருகச் செய்வதற்கு அவர்களைப் பொறுப்பேற்க வைக்கிறீர்கள்?
சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.