மொழி


English English
አማርኛ Amharic
العربية Arabic
العربية - الأردن Arabic (Jordanian)
العربية التونسية Arabic (Tunisian)
Armenian Armenian
Sign Language American Sign Language
বাংলা Bengali (India)
भोजपुरी Bhojpuri
Bosanski Bosnian
မြန်မာဘာသာ Burmese
中文(繁體,香港) Cantonese (Traditional)
中文(简体) Chinese (Simplified)
中文(繁體) Chinese (Traditional)
Hrvatski Croatian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिन्दी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
日本語 Japanese
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
മലയാളം Malayalam
मराठी Marathi
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Odia
فارسی Persian/Farsi
Polski Polish
Português Portuguese
ਪੰਜਾਬੀ Punjabi
ਪੰਜਾਬੀ (ਪੱਛਮੀ) Punjabi (Western)
Русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Soomaali Somali
Español Spanish
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اردو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba

அறிவை விட உண்மைத்தண்மையே சிறந்தது

அறிவு மற்றும் பயிற்சியை விட உண்மைத்தண்மை என்பது ஆவிக்குறிய முதிர்ச்சியின் சிறந்த அளவீடாகும். நாம் சீஷர்களைப் பெருக்கும் போது, ​​​​சரியான விஷயங்களை அளவிடுகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.  கீழ்ப்படிந்து, நாம் கேட்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டால், நாம் உண்மையுள்ளவர்கள். நாம் கேட்டும் அதற்கு கீழ்ப்படிய மற்றும் பகிர்ந்து கொள்ள மறுத்தால் நாம் உண்மையாக இல்லை என்று அர்த்தம்.

இந்த வீடியோவைப் பாருங்கள்

இன்று தேவாலயத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் இரண்டு கருத்துக்கள் உள்ளன.

முதலாவதாக, ஒருவரின் ஆவிக்குறிய முதிர்ச்சி என்பது கடவுளுடைய வார்த்தையை அவர்கள் எவ்வளவு அறிந்திருக்கிறார்கள் என்பதோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சரியான நம்பிக்கை - அல்லது மரபுவழி – என்பது, ஒருவருடைய நம்பிக்கையின் நல்ல அளவுகோலாக செயல்படும் என்று சொல்கிறார்கள்.

இரண்டாவதாக, ஒருவருடைய வழிநடத்தும் திறனுக்கு அவர்கள் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன் ஒரு “முழுப் பயிற்சி” தேவை என்ற எண்ணம். அவர்களின் முழுமையான அறிவு - இது ஒருவரின் சேவைத் திறனைக் காட்டுகிறது என்கிறார்கள்.

முதல் யோசனையில் உள்ள பிரச்சனை – மரபு வழியை நம்புவது - அல்லது "சரியான நம்பிக்கை", சாத்தான் கூட, எந்த மனிதனையும் விட அதிகமான வேத வசனங்களை அறிந்திருக்கிறான். கடவுளின் வார்த்தை கூறுகிறது - கடவுள் ஒருவரே என்று நீங்கள் நம்புகிறீர்கள். நல்லது! பிசாசுகள் கூட அதை நம்புகின்றன - மேலும் நடுங்குகின்றன.

ஒருவரின் ஆவிக்குறிய முதிர்ச்சியின் சிறந்த அளவுகோல் ஆர்த்தோபிராக்ஸி - "சரியான பயிற்சி".

நமக்குத் தெரிந்தவற்றின் அடிப்படையில் மட்டுமே முதிர்ச்சியை அளவிடுவதை விட, கீழ்ப்படிதல் மற்றும் பகிர்தல் ஆகியவற்றில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.

இரண்டாவது யோசனையின் சிக்கல் - ஒருவர் வழிநடத்துவதற்கு முன்பு முழுமையாகப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இங்கு யாரும் முழுமையாக பயிற்சி பெற்றிருக்கவில்லை.

தேவனுடைய இராஜ்யத்தில் மிக முக்கியமான சில வேலைகளைச் செய்ய, இன்னும் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கும் இளம் தலைவர்களை அனுப்புவதை இயேசு மாதிரியாகக் காட்டினார்.

கடவுளுடைய வார்த்தை கூறுகிறது - இயேசு தம்முடைய பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் ஒன்று சேர்த்து, எல்லா பிசாசுகள் மற்றும் நோய்களின் மீது முழுமையான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கினார். பிறகு கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிச் சொல்லவும் நோயாளிகளைக் குணப்படுத்தவும் அவர்களை அனுப்பினார்.

இயேசு இரட்சகர், என்று பேதுரு தனது நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்பே இந்த மனிதர்கள் அனுப்பப்பட்டனர் - விசுவாசத்தின் முதல் படியாக இதை நாம் கருதலாம். அனுப்பப்பட்ட பிறகும் கூட, இயேசு, பேதுருவை அவரின் தவறுகளுக்காக பலமுறை கடிந்து கொண்டார், மேலும் பேதுரு பின்னாளில் இயேசுவை மறுதளித்தார். மற்றவர்கள், யார் கடவுளுடைய வருங்கால ராஜ்யத்தில் பெரியவர், ஒவ்வொருவரும் அங்கு என்ன பங்கு வகிப்பார்கள் என்று வாதிட்டுக் கொண்டனர்.

அவர்கள் அனைவரும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் ஏற்கனவே அறிந்ததைப் பகிர்ந்து கொள்ளும் வேலையை இயேசு அவர்களுக்கு கொடுத்தார். உண்மைத்தண்மை - அறிவைக் காட்டிலும் - ஒருவர் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கியவுடன் தொடங்கக்கூடிய ஒன்று. 

முதிர்ச்சி என்பது நேரத்தைச் சார்ந்தது, ஆனால் ஒரு சீஷரின் வாழ்க்கையில் எந்த ஒரு புள்ளியிலும் உண்மைத்தண்மையை நிரூபிக்க முடியும்.

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

சூம் பயிற்சியை ஆரம்பிக்கவும்

சில நண்பர்களைக் கூட்டி சேர்க்கவும் அல்லது ஏற்கனவே உள்ள சிறிய குழுவுடன் பயிற்சிக்குச் செல்லவும். உங்கள் சொந்த பயிற்சி திட்டத்தை உருவாக்கி உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்கவும்.