முதிர்ச்சி பெற்று வுரும் சீஷர்களுக்கான பயிற்சி சுழற்சி

முதிர்ச்சி பெற்று வுரும் சீஷர்களுக்கான பயிற்சி சுழற்சி

This concept is called "முதிர்ச்சி பெற்று வுரும் சீஷர்களுக்கான பயிற்சி சுழற்சி" in session 7 of the Zúme Training

ஆவிக்குறிய வளர்ச்சியின் நான்கு தனித்துவமான படிகள் மூலம் சீஷர்களை முதிர்ச்சி பெறச் செய்வதற்கு பயிற்சி சுழற்சி பயன்படுத்தப்படுகிறது. அந்த படிகளில் பின்வருவன அடங்கும்: மாதிரி, உதவு, கவனி மற்றும் செல்.

பயிற்சி சுழற்சி, ஒரு சீஷரை புதியவராய் இருப்பதிலிருந்து, திறமை அல்லது ஒழுக்கமானவராக மாற்றுகிறது மற்றும் அந்தத் திறமையில் அவர்களுக்கு இனி பயிற்சி தேவைப்படாத வரைக்கும், அவர்களின் திறனை வளர்க்கிறது. பல சீஷர்கள் மற்றும் சீஷர்களை உருவாக்குபவர்கள் பயிற்சி சுழற்சியின் ஆரம்ப படிகளிலேயே சிக்கிக் கொள்கிறார்கள் (மாதிரி, உதவி), மூன்றாவது படியில் (கவனி) போதுமான நேரத்தை செலவிடுவதில்லை, மேலும் நான்காவது படிக்குப் (செல்) போவதேயில்லை.

இந்த வீடியோவைப் பாருங்கள்

பயிற்சி சுழற்சி இப்படிச் செயல்படுகிறது:

பயிற்சி சுழற்சி என்றால் என்ன? இப்படி யோசியுங்கள். நீங்கள் எப்போதாவது சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது எப்போதாவது மற்றவர் கற்றுக்கொள்ள உதவியிருக்கிறீர்களா? அப்படியானால், பயிற்சி சுழற்சியை அனுபவபூர்வமாக நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்க வாய்ப்புள்ளது.

Training Cycle

மாதிரி

மாதிரியை காண்பிப்பது என்பது ஒரு நடைமுறை அல்லது ஒரு முறைக்கான உதாரணத்தை வழங்குவது. இது பயிற்சி சுழற்சியின் சுருக்கமான பகுதியாகும். இது பொதுவாக ஒரு முறை மட்டுமே செய்யப்பட வேண்டும். இது ஒரு நடைமுறை அல்லது ஒரு முறை இருப்பதைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவது மற்றும் அது எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய பொதுவான கருத்தை கொடுப்பது. மீண்டும் மீண்டும் மாதிரியை காண்பிப்பது ஒருவரைச் தயார் செய்வதற்கான ஒரு சிறந்த வழி அல்ல. அவர்களின் திறமையை அவர்களே முயற்சிக்க அனுமதிக்க வேண்டும். ஒரு குழந்தை யாரோ ஒருவர் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்தால், அதுதான் மாதிரியின் கட்டம்.

 உதவு

உதவி செய்வது என்பது கற்பவர் தன் திறமையைப் பயிற்சி செய்ய அனுமதிக்கிறது. இது மாதிரி என்கிற கட்டத்தை விட அதிக நேரம் எடுக்கும். அதற்கு வழிகாட்டியின் தரப்பிலிருந்து உதவி தேவைப்படுகிறது. வழிகாட்டி வழிகாட்டியாக இருக்க வேண்டும் மற்றும் கற்பவருக்கு பயிற்சி அளிப்பதில் பங்கு வகிக்க வேண்டும். இந்தக் கட்டம் கற்பவர் முழுத் திறமையுள்ளவராக ஆகும் வரை நீடிக்காது, ஆனால் திறமையின் அடிப்படைகளை அவர்கள் புரிந்து கொள்ளும் வரை மட்டுமே நீடிக்கும். இந்த கட்டம் நீண்ட காலம் தொடர்ந்தால், கற்பவர் வழிகாட்டியை சார்ந்து இருப்பார் மேலும் முழு திறனில் முன்னேற்றம் அடைய மாட்டார். உதவிக் கட்டத்தின் முடிவு, கற்றவர் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் தொடங்குவதன் மூலம் குறிக்கப்பட வேண்டும். பெற்றோர் சைக்கிளை பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு குழந்தை தனது சமநிலையை பராமரிக்க கற்றுக் கொண்டிருப்பது தான் உதவி செய்யும் கட்டம்.

 கவனி

கவனிப்பது என்பது மிக நீண்ட கட்டம். இது கற்பவருடன் அதிகமான, மறைமுக தொடர்பை உள்ளடக்கியது. இது ஒருவர் தன் திறமையின் அனைத்து அம்சங்களிலும் முழுமையடையச் செய்கிறது. முதல் இரண்டு கட்டங்கள் இணைந்திருப்பதை விட பத்து மடங்கு அல்லது அதற்கும் அதிகமாக இருக்கலாம். கற்பவர் திறமையில் முன்னேறும்போது, ​​வழிகாட்டியுடனான தொடர்பு குறைவாகவும், தற்காலிகமாகவும் மாறக்கூடும். இந்த கட்டத்தில் கற்பவர் படிப்படியாக தனது திறமையின் செயல்திறனில் அதிக பொறுப்பையும், முன்முயற்சியையும் எடுக்கிறார். பொதுவாக கற்பவர் தனது திறமைகளை அடுத்த நான்காவது தலைமுறைக்கு சென்றடையச் செய்யும் போது, சீஷர்களை உருவாக்கும் இந்த கட்டம் முடிவடைகிறது. ஒரு குழந்தை சைக்கிள் ஓட்டுவதை பெற்றோர் கவனித்து, அவர்கள் மேற்பார்வையின்றி சவாரி செய்வதற்கான போதுமான திறன்களையும், அறிவையும் அந்த குழந்தை வைத்திருப்பதை உறுதி செய்யும் போது இந்த கட்டம் முடிவடைகிறது. ​​இது ஒரு கண்காணிப்பு கட்டமாகும்.

விட்டு செல்

கற்பவர், வழிகாட்டிக்கு இணையாக மாறும்போது, விட்டு செல்வது ஒரு வகையான பட்டப்படிப்பாகிறது. கற்பவரும், வழிகாட்டியும் ஒரே நெட்வொர்க்கில் இருந்தால், அவ்வப்போது தொடர்பு மற்றும் சக வழிகாட்டுதல் தொடர்ந்து நடைபெறலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தையை,மிதிவண்டியை முற்றிலும் மேற்பார்வையின்றி ஓட்டுவதற்கு விடுவித்தால், அதுவே விட்டு செல்லும் கட்டமாகும்.

சீஷர்களின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதில் பயிற்சி சுழற்சியைப் பயன்படுத்துவதற்கு, மேலும் பார்க்கவும் சீடர்களை உருவாக்குவதற்கான பயிற்சிப் பட்டியல்

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்

  •     நீங்கள் எப்போதாவது பயிற்சி சுழற்சியின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறீர்களா?
  •     நீங்கள் யாருக்கு பயிற்சி கொடுத்தீர்கள்? அல்லது உங்களுக்கு யார் பயிற்சி கொடுத்தது?
  •     ஒரே நபர் வெவ்வேறு திறன்களைக் கற்றுக் கொள்ளும்போது பயிற்சி சுழற்சியின் வெவ்வேறு பகுதிகளில் இருக்க முடியுமா?
  •     அப்படி ஒருவருக்கு பயிற்சி கொடுத்தால் எப்படி இருக்கும்?

 

நீங்கள் இழக்கிறீர்கள். இப்போது பதிவுசெய்க!

  • உங்கள் தனிப்பட்ட பயிற்சியின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும்
  • அணுகல் குழு திட்டமிடல் கருவிகள்
  • ஒரு பயிற்சியாளருடன் இணையவும்
  • உலகளாவிய பார்வைக்கு நீங்கள் செய்ததை சேர்க்கவும்!

சூம் இணைய தளத்தை பயன்படுத்தி, அதன் உறுப்பினர்களை, சீஷர்களை உருவாக்குவதற்கும், சபைகளை ஸ்தாபிப்பதற்கும், செயல் முறைகளையும் நடைமுறைகளையும் உருவாக்குவதற்கும் தகுதி படுத்துகிறது.

முழுப் பயிற்சியையும் காண்க


பெரிய ஜூம் தொலைனோக்கு பார்வையின் ஒரு பகுதியாக ஜூம் பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

ஜூம் பயிற்சியின் தொலைனோக்கு பார்வையைப் பற்றி மேலும் அறிக

Loading...

மொழி


English English
العربية Arabic
العربية - الأردن Arabic (JO)
Sign Language American Sign Language
भोजपुरी Bhojpuri
বাংলা Bengali (India)
Bosanski Bosnian
粵語 (繁體) Cantonese (Traditional)
Hrvatski Croatian
فارسی Farsi/Persian
Français French
Deutsch German
ગુજરાતી Gujarati
Hausa Hausa
हिंदी Hindi
Bahasa Indonesia Indonesian
Italiano Italian
ಕನ್ನಡ Kannada
한국어 Korean
کوردی Kurdish
ພາສາລາວ Lao
𑒧𑒻𑒟𑒱𑒪𑒲 Maithili
國語(繁體) Mandarin (Traditional)
国语(简体) Mandarin (Simplified)
मराठी Marathi
മലയാളം Malayalam
नेपाली Nepali
ଓଡ଼ିଆ Oriya
Apagibete Panjabi
Português Portuguese
русский Russian
Română Romanian
Slovenščina Slovenian
Español Spanish
Soomaaliga Somali
Kiswahili Swahili
தமிழ் Tamil
తెలుగు Telugu
ไทย Thai
Türkçe Turkish
اُردُو Urdu
Tiếng Việt Vietnamese
Yorùbá Yoruba
More languages in progress